சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சைபர் குற்றங்களால் பணம் இழந்த 133 புகார்தாரர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2,04,92,709/- மீட்டு வழங்கியுள்ளது. மேலும், 2025ம் ஆண்டு 30 நவம்பர் வரை சைபர் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.24,92,13,483/- என காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. 1930 அவசர உதவி எண் மற்றும் நேரடி புகார்களின் அடிப்படையில், நவீன தொழில்நுட்ப விசாரணை மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளின் தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, இழந்த பணத்தொகையை இழந்தவர்களின் வங்கி கணக்கில் மீட்டு வழங்குவதிலும், இழந்தவர்களுடைய பணத்தை மற்றொரு வங்கி கணக்கில் அனுப்பகோரி சிலர் ஏமாற்றப்பட்டிருப்பதும், வழக்கு சார்ந்து வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உரிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீள பெற்று தருவதிலும் சென்னை பெருநகர காவல் துறை முன்னிலை வகிக்கிறது.
சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகள் திறம்பட துரிதமாக விசாரணை மேற்கொண்டு கடந்த நவம்பர் மாதம் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மீட்பு விவரம்,
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்:
36 மனுக்கள் பெறப்பட்டு, 61 வழக்குகளில் ரூ.1,00,18,238 மீட்பு
வடக்கு மண்டலம்:
11 மனுக்கள் பெறப்பட்டு, 20 வழக்குகளில் ரூ.19,38,538 மீட்பு
மேற்கு மண்டலம்:
24 மனுக்கள் பெறப்பட்டு, 14 வழக்குகளில் ரூ.27,65,938 மீட்பு
தெற்கு மண்டலம்:
45 மனுக்கள் பெறப்பட்டு, 26 வழக்குகளில் ரூ.41,53,791 மீட்பு
கிழக்கு மண்டலம்:
30 மனுக்கள் பெறப்பட்டு, 12 வழக்குகளில் ரூ.16,16,204 மீட்பு,
மொத்தமாக 146 மனுக்கள் பெற்று, 133 புகார் தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் பணம் ரூ.2,04,92,709/- (இரண்டு கோடியே நான்கு லட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்து எழுநூற்று ஒன்பது ரூபாய்) மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு 2025ம் ஆண்டு 30.11.2025 வரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இழந்த பணத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, பொதுமக்கள் இணைய வழி பண பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் உரிய நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்திடவும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!


