சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன் (34). இவர் துபாயில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள மாமனார் சுலைமானுக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர். இரண்டாவது தளத்தை வாடகைக்கு விட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அபூபக்கர் ஹாரூன் குடும்பத்துடன் கீழக்கரை சென்றுள்ளார். இன்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 4 ரோலக்ஸ் வாட்ச்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் கைவரிசையா? அல்லது நன்கு அறிமுகமானவர்கள் கைவரிசை கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நுங்கம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


