spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை - நீதிபதி ஆர்.மகாதேவன்

சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை – நீதிபதி ஆர்.மகாதேவன்

-

- Advertisement -

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கொண்ட தமிழர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத  நோய்களே இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத  நோய்களே இல்லை - நீதிபதி ஆர்.மகாதேவன்டாக்டர் ஒய்.ஆர் மானெக் ஷா எழுதிய சித்தமிருக்க பயமேன் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தமிருக்க பயமேன் நூலை உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வெளியிட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சரவணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நீதிபதி ஜெகதிஷ் சந்திரா, சித்த மருத்துவ என்பது வெறும் மூலிகை மருத்துவம் அல்ல என்றும்  அது வாழ்வியல் நெறி என தெரிவித்தார். தேரையர் என்ற சித்தர், எந்த மருத்துவ வசதிகளும் இல்லாத அந்த காலத்திலேயே மண்டை ஓடு நீக்கி சித்த மருத்துவம் சிகிச்சை அளித்தாக குறிப்பிட்ட நீதிபதி, சித்த மருத்துவத்தில் மனிதனின் தலைமுடி முதல் பாதம் வரை அனைத்திற்கும் மருந்துக்கள் இருப்பதாக தெரிவித்தார். கொரானாவுக்கு பின் சித்த மருத்துவம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

இதன் பின் பேசிய  உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், அகத்தியர் போகர், திருமூலர் என பல சித்தர்கள் அருளிய பல்வேறு ஓலை சுவடிகள்  மூலம் உருவானது தான் நம் தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் என்றும் மனிதனின் உடல், மனம் மற்றும் உயிர் சார்ந்த அனைத்து தத்துவங்களையும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகிற்கே பகிர்ந்தது தான் நம் தமிழ் மண் என குறிப்பிட்டார்.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கொண்ட தமிழர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத  நோய்களே இல்லை என தெரிவித்தார். உலக குத்து சண்டை வீரர்  முகமது அலி, பார்க்கிங்சன் என்ற மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அந்நோய்க்கு இது வரை மருத்துக்கள் கண்டுபிடிப்படவில்லை என தெரிவித்த நீதிபதி 1500 ஆண்டுகளுக்கு முன்பே பார்க்கிங்சன் நோய்க்கு சித்த மருத்துவத்தில் நோய்க்கு மருத்துக்கள் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.

15 ஆண்டு கால தேடல்… தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை பறைசாற்றும் “பொருநை அருங்காட்சியத்தின் வரலாற்று பயணம்…

MUST READ