மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி ஆய்வாளர் மற்றொரு பெண் காவலர் இருவர் பலி.
திருவெற்றியூர், அண்ணாமலை நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ஜான் அவரது மனைவி ஜெயஸ்ரீ (38) இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
அவருடன் பணியில் இருந்த மற்றொரு பெண் காவலர் , புளியந்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்த நித்தியா (35) ஆகிய இருவரும் ஒரு வழக்கு சம்பந்தமாக தனது புல்லட் வாகனத்தை எடுத்துக்கொண்டு மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 3 மணி அளவில் மேல்மருவத்தூர் பத்மாவதி திருமண மண்டபம் அருகே செல்லும் போது இவர்களுக்கு பின்னால் வந்த பாண்டிச்சேரி டாடா இண்டிகோ என்ற கார் இவர்கள் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனிருந்த பெண் காவலர் நித்யாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார் .
இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் இறந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும் பெண் காவலர் நித்தியாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழையும் அந்த 6 பேர் யார்?