Homeசெய்திகள்பெண்களின் நலனுக்காக முதலமைச்சர் - கீதா ஜீவன்

பெண்களின் நலனுக்காக முதலமைச்சர் – கீதா ஜீவன்

-

பெண்களின் நலனுக்காகவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் – அமைச்சர் கீதா ஜீவன்

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஔவையார் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சாமிநாதன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் ஆகியோர் ஔவையார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பு‌;

பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, கல்வியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு, கிராமப்புற பெண்களுக்கு சுய உதவி குழு, உள்ளிட்ட பெண்களின் ஏற்றத்திற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு படிப்படியாக ஏற்ற நிலையை உருவாக்கி அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைய செய்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு பெண்களின் ஏற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறது.

முதலமைச்சர் முதன் முதலில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது, சுய உதவி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, புதிய சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது, தொழில் பயிற்சி மானிய கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது, மகளிர் கொள்கையும் வெளியிடப்பட உள்ளது.

கைம்பெண் நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. பெண்களின் நலனுக்காகவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இன்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளோம் அனைத்து பெண்களும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும் பெரியார் கண்ட புரட்சி பெண்ணாகவும் கலைஞர் திட்டத்தில் பயனடையும், முதலமைச்சர் திட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் அடையவும் அடைவோம் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

MUST READ