ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்க, தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். எம்.எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளனர்.ஆக்சன் – திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அதுல்யா ரவி, வினய் ராய், அனன்யா, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலருக்கு நடிகர் மணிகண்டன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த டிரைலரை பார்க்கும்போது இதன் தலைப்பிற்கு ஏற்ப இப்படமானது டீசல் மாஃபியா சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகிறது. ஹரிஷ் கல்யாணும் ஃபுல் எனர்ஜியுடன் ஆக்சன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களை போல் இந்த படமும் ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.