Homeசெய்திகள்சினிமாவிமல் பட இயக்குனர் மரணம்.... பிரபல தயாரிப்பாளர் இரங்கல்!

விமல் பட இயக்குனர் மரணம்…. பிரபல தயாரிப்பாளர் இரங்கல்!

-

- Advertisement -

விமல் பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்.விமல் பட இயக்குனர் மரணம்.... பிரபல தயாரிப்பாளர் இரங்கல்!

திரைத்துறையில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நாகேந்திரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விமல், சமுத்திரக்கனி, புன்னகை பூ கீதா, எம்.எஸ். பாஸ்கர், சிங்கம்புலி ஆகியோரின் நடிப்பில் உண்மை கதையை மையமாகக் கொண்டு வெளியான காவல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் இவர் இன்று (ஏப்ரல் 26) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவு செய்து கேட்டது மிகத் துயரமான நாளை துவங்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்து போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்து கொண்டு போய் விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையாக இருக்கிறது.

காலம் யாருக்கு என்ன செய்ய காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்திச் செல்கிறது. சகோதரனாய், நெருங்கிய நண்பனாய் பயணித்தவரை சட்டென்று இழந்து போனதில் நெஞ்சம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இந்த அதிர்ச்சியை தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவிற்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும்” என்று குறிப்பிட்டு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

MUST READ