- Advertisement -
பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், சீரியல் நடிகை சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் அவரது காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 90களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பின்னர் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் ரெடினுக்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. தொடர்ந்து நெல்சன் இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் நடித்தார். டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அனைத்து படங்களிலும் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் டாக்டர் படத்தில் காவல் துறை நண்பனாக ரெடின் நடித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.



