spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகிரிக்கெட்டில் அரசியல்... ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் கூறிய விமர்சனம்..

கிரிக்கெட்டில் அரசியல்… ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் கூறிய விமர்சனம்..

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயர்கள் சாந்தனு மற்றும் அசோக் செல்வன். ஆண்டிற்கு பல படங்கள் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் இரண்டு ஆண்டிற்கு ஒரு படம் நடித்தாலும் அதை சிறந்த கதையை தேர்வு செய்து நடிப்பதில் இருவருமே வல்லவர்கள். வழக்கமான காதல், காமெடி, என கமர்ஷியல் படங்களாக இல்லாமல் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பார் நடிகர் அசோக் செல்வன். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் போர்த்தொழில் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இறுதியாக சபாநாயகன் படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ப்ளூ ஸ்டார். ஜெயக்குமார் இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார். இதில் கீர்த்தி பாண்டியன், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்து உள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

we-r-hiring
இந்நிலையில், இன்று ப்ளூ ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோருக்கு இடையே நிலவும் போட்டி அதேபோல, அரக்கோணத்தில் 90-களில் நடைபெற்ற கதை, கிரிக்கெட்டில் நிலவும் சாதிய அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி கதை நகர்கிறது.
ஏற்கனவே வெளியான மெட்ராஸ் மற்றும் சார்பட்டா ஆகிய படங்களை கலந்தது போல நல்ல கதையம்சம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். கதாநாயகர்களுக்கு இடையே உள்ள போட்டி ரசிக்கும் படியாக உள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனம் கூறியிருக்கின்றனர்.

படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிப்பில் 100 சதவிகித பங்களிப்பை கொடுத்துள்ளதாகவும், அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பும் ரசிக்கும்படியாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும், படத்தில் ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு காணப்படுவதாகவும், எடிட்டிங் பணிகள் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம் என விமர்சனம் கூறினர். பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

MUST READ