Homeசெய்திகள்சினிமாமீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்!? கலக்கத்தில் ரசிகர்கள்!

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்!? கலக்கத்தில் ரசிகர்கள்!

-

நடிகர் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதும் தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்குவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்தார். படத்தில் ஷ்யாம், சரத்குமார், பிரபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அவர் விஜயிடம் ஒரு கதை கூறியதாகவும் கதையை கேட்ட உடனே படத்தில் நடிக்க விஜய்  சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் கோபிசந்த் மாலினேனி அதிரடியான மாஸ் மற்றும் கமர்சியல் படங்கள் உருவாக்குவதில் ஒரு ஸ்பெஷலிஸ்ட். அவர் கடைசியாக பாலைய்யா இயக்கத்தில் வீரசிம்மா ரெட்டி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரா என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் கலக்கம் நிலவுவதும் நிஜம் தான்!

MUST READ