Homeசெய்திகள்சினிமாகாத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா 'கேப்டன் மில்லர்'?.....விமர்சனம் இதோ!

காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா ‘கேப்டன் மில்லர்’?…..விமர்சனம் இதோ!

-

\காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா 'கேப்டன் மில்லர்'?தனுஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியான படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருந்தது. அருண் மாதேஸ்வரன் தனது ஒவ்வொரு படங்களிலுமே எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் ஏதோ ஒரு விஷயத்தை தன் படத்தில் வைத்திருப்பார். கேப்டன் மில்லர் அதையும் தாண்டி சாமானிய மக்களை சென்றடையும் விதத்தில் தரமான சம்பவத்தை கொடுத்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.

அதேசமயம் நடிகர் தனுஷும் தனது ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொரு பரிமாணத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார். தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரையிலும் முத்திரை பதித்துள்ளார்.காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா 'கேப்டன் மில்லர்'?

இந்த கேப்டன் மில்லர் படம் ஆனது 800 காலகட்டங்களின் இறுதியிலும் 1900 காலகட்டங்களின் தொடக்கத்திலும் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அந்த வகையில் சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராட்டம் நடந்த காலகட்டத்தில் காதல், குடும்பம் என அனைத்தும் கைவிடப்பட்ட ஒரு தனி மனிதனின் நிலை என்ன அவன் வீரனாக இருக்கும் பட்சத்தில் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அவன் என்ன செய்கிறான் என்பதுதான் கேப்டன் மில்லர் படத்தின் கதை. பிரியங்கா அருள்மோகன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சந்தீப் கிசனும் சிவராஜ்குமாரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அவர்களும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சரியாக நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜி வி பிரகாஷின் இசை கேப்டன் உள்ளே படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் அசுர நடிப்பினால் முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் தனுஷ். இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா 'கேப்டன் மில்லர்'?

இருந்த போதிலும் அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களைப் போல இது வேகமாக படமாக இல்லாமல் சற்று மெதுவாக தான் இதன் முதல் பாதி செல்கிறது. அதே சமயம் ஆக்ஷன் காட்சிகளுடன் வரும் பின்னணி இசை கூஸ்பம்ப்பாக இருக்கிறது. எனினும் வில்லன் கதாபாத்திரம் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.  இரண்டாம் பாதி பெரும்பாலும் ஆக்சன் நிறைந்ததாக இருப்பதால் ஆக்சன் காட்சிகளை விரும்புவர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும்.

MUST READ