ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியில் புதிய படம்… டப்பிங் தொடக்கம்…
- Advertisement -
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட அற்புதமான கலைப் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குனர் ராம். கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்கநர் ராம். இவர் மற்ற இயக்குநர்களை போல் அல்லாமல், இவருக்கென தனி ஸ்டைல் உண்டு. வாழ்வின் எதார்தத்தை படங்கள் வழியே மக்களுக்கு கடத்துவதில் இயக்குநர் ராம் கைதேர்ந்தவர் என்றே சொல்லலாம். இறுதியாக மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இது தவிர மிர்ச்சி சிவாவை வைத்து அவர் புதிய படமும் இயக்கி வருகிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி, படப்பிடிப்பும் தொடங்கியது
இத்திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்திருக்கின்றனர். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது.