Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் சொல்லப்படும் BUDS ACT பற்றி தெரியுமா ?

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் சொல்லப்படும் BUDS ACT பற்றி தெரியுமா ?

-

- Advertisement -

ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் சொல்லப்படும் BUDS ACT பற்றி தெரியுமா ?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசூல் இரண்டே நாட்களில் 100 கோடியை தாண்டியதாக தெரிவிக்கின்றனர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய போன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் ‘வேட்டையன்’ படத்தில் சொல்லப்படும் பட்ஸ் சட்டம் (BUDS ACT) என்பது என்ன?  பட்ஸ் சட்டம்  குறித்து அமிதாப் பச்சன் எடுக்கும் பாடம் ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது. பட்ஸ் சட்டம்  என்பது வரையறுக்கப்படாத வைப்பு திட்டங்களை தடை செய்யும் சட்டம் ஆகும். எம்.எல்.எம் போன்ற முதலீட்டு திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றும் வேலைகளை தடுப்பதற்காகவே 2019ம் ஆண்டு இந்த BUDS ACT கொண்டுவரப்பட்டுள்ளது.

‘வேட்டையன்’ படத்திற்கு எதிராக கிளம்பிய சர்ச்சை….. கொந்தளிக்கும் கோவில்பட்டி மக்கள்!

இந்த சட்டத்தின்படி கைதாகும் குற்றவாளிகள் ஜாமினில் வெளியே வர முடியாது எனவும் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ