தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான விஷயங்கள் தடுக்க முடியாமல், தன்னை பாதுகாத்து கொள்வதற்காக காவல்துறை இது போன்று செய்கின்றது – நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தை சென்னை காசி திரையரங்கிள் ரசிகர்களுடன் பார்த்தப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஹிட்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த படம் இயக்குனருக்கு ஒரு முக்கியமான படமாக அமையும். ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன தேவையோ அவை அனைத்தும் இந்த படத்தில் இருக்கின்றது.
திரைப்படங்களில் சோசியல் மெசேஜ் சொல்வது அவை அனைத்தும் டைரக்டர் கையில் உள்ளது. அவர்கள் ஒரு கதையோடு வருவார்கள் அந்த மெசேஜ் பிடித்திருந்தால் பண்ணலாம் என்று ரசிகர்கள் போல் யோசிக்க கூடிய விஷயம் தான்.
பிச்சைக்காரன் படத்தில் அம்மாவுக்காக அர்ப்பணித்தேன். பிச்சைக்காரன் 2 ல் தங்கச்சிக்காக சில விஷயங்கள் செய்தேன்,கோடியில் ஒருவன் சின்ன பையன் அம்மா பேச்சை கேட்காமல் ஊதாரியாக இருப்பான், அதில் அம்மா எவ்வளவு முக்கியம் என்று சொல்லியிருப்பேன். இதன் மூலம் மக்களை கவர்ந்ததால் விஜய் ஆண்டனி என்று சொன்னாலே நம் பையன் என்று பார்ப்பதற்கு ஒரு இமேஜ் கிடைத்திருக்கிறது. இதனால் பெண்கள் ரசிகர்கள் அதிகமாக கிடைத்துள்ளது.
“தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது” என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான விஷயங்கள் தடுக்க முடியாமல், தன்னை பாதுகாத்து கொள்வதற்கு காவல்துறை இது போன்ற விசயங்களை செய்கிறது. அதைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டுதான் வருகிறது, எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. ஐ அம் நாட் போலீஸ்!
உலகம் முழுவதும் பணத்திற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. பணம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம். இது வந்து பொதுவான ஒன்றுதான். பிச்சைக்காரன் படத்தில் பணத்தின் மதிப்பு என்ன என்பதை சொல்லி இருப்போம்.
சமூக சார்ந்த கருத்துள்ள படங்கள் விஜய் ஆண்டனி தேடி வருகிறது எனவும் நான் இயக்கிய இரண்டு படங்களைத் தவிர அனைத்து படங்களும் என்னை தான் தேடி வருகிறது என்றும் நினைக்கிறேன் என கூறினர்.
அனைத்து தவறுகளுக்கும் மக்கள்தான் காரணம். மக்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம் ஓட்டு என்ற பவர்ஃபுல் ஆயுதம் இருக்கிறது. எப்ப வேண்டுமானாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் முயற்சி செய்ய முடியும்.