Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் மிரட்டும் ஜூனியர் என்டிஆர்..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த 'தேவரா' படக்குழு!

இரட்டை வேடங்களில் மிரட்டும் ஜூனியர் என்டிஆர்….. புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த ‘தேவரா’ படக்குழு!

-

- Advertisement -

தேவரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.இரட்டை வேடங்களில் மிரட்டும் ஜூனியர் என்டிஆர்..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த 'தேவரா' படக்குழு!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து தேவரா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வில்லனாக சைப் அலிகான் நடித்திருக்கிறார். இதனை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ரத்னவேலு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான நிலையில் அடுத்தடுத்து போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை தவிர்த்து வருகிறது. ஆகையினால் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் தேவரா படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.இரட்டை வேடங்களில் மிரட்டும் ஜூனியர் என்டிஆர்..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த 'தேவரா' படக்குழு! இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் காண்பிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின் படி ஜூனியர் என்டிஆர், தேவரா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ