விஜய் சேதுபதி, அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இவர் கங்கனா ரணாவத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பிரபல நடிகை கங்கணா ரனாவத் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள எமர்ஜென்சி திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த முடித்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கங்கணா ரணாவத் மாதவனுடன் இணைந்து தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது மாதவனுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. மேலும் இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் கதை களத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக நடிகை கங்கனா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.