- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அரசியலுக்கு வர இதுதான் சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடிப்பு ரீதியாக மட்டுமன்றி பல சமூக பிரச்சனைகளுக்கும், அவர் குரல் கொடுத்து வருகிறார். அதே போல அவ்வப்போது விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அரசியல் தலைவர், வாரிசு அரசியல், திரையில் வாரிசு அரசியல் என அனைத்து குறிக்கும் அவர் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால், அவருக்கு பல சிக்கல்கள் ஏற்படுவதும் வழக்கமாகும்.


அண்மையில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த இத்திரைப்படம் கடந்த அக்போடர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்க நியமிக்கப்பட்ட 3 பெண்களின் கதையை மைப்படுத்தி இப்படம் உருவானது. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் எமர்ஜென்சி திரைப்படமும் வெளியாக உள்ளது.



