spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த கைதி, மாஸ்டர் பட நடிகர்!

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த கைதி, மாஸ்டர் பட நடிகர்!

-

- Advertisement -

நடிகர் லல்லு சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

we-r-hiring

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் லல்லு இணைத்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ரங்கூன் ரிலீஸ் ஆகி 7 வருடங்கள் ஆகிறது, உங்கள் முதல் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். எங்கள் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். நீங்கள் எனக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீர்கள், அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் லல்லு கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ