spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகிறது லவ்வர் படத்தின் முதல் பாடல்

நாளை வெளியாகிறது லவ்வர் படத்தின் முதல் பாடல்

-

- Advertisement -
மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

 

we-r-hiring

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் மணிகண்டன். ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த குட் நைட் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மணிகண்டனின் எதார்த்தமான நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.
இதையடுத்து அவர் நடித்து வரும் புதிய திரைப்படம் லவ்வர். இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு இசையமைக்கிறார். இந்த புதிய படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது

இப்படத்தின் முதல் தோற்றமும், டீசரும அண்மையில் வெளியானது. படத்தின் டீசர் பெரிதளவில் பேசப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் ரொமேண்டிக் வேடத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ