நடிகை மஞ்சிமா மோகன் ரசிகருக்கு அளித்துள்ள பதில் கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக முன்னேறி வருபவர் கௌதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதையடுத்து என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிம்புவின் பத்து தல படத்தில் காணப்பட்டார்.

இதற்கிடையில் நடிகை மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலித்து கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து மகிழ்வாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சிமா மோகன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில் ஒருவர், “நீங்கள் இருவருமே பிரபலங்கள். ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது உங்களுக்கு எப்படி இருக்கிறது?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அருமை! என்னிடம் ஒருவர் இந்தக் கேள்வி கேட்பது இதுவே முதல் முறை
கேள்வி..நல்லது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அப்படி பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் சாதாரண மனிதர்கள். நடிக்கும் போது மட்டும் தான் நாங்கள் நடிகர்கள். தேவைப்படும்போது வேலை பற்றி பேசுவோம்
அவ்வளவுதான்!” என்று தெரிவித்துள்ளார்.