Homeசெய்திகள்சினிமாமும்பையில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு... தமிழ் பிரபலங்கள் வாக்களிப்பு...

மும்பையில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு… தமிழ் பிரபலங்கள் வாக்களிப்பு…

-

மும்பையில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், தமிழ் நட்சத்திரங்கள் வாக்களித்தனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு முதல் கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வாக்களித்தனர். மக்கள் மட்டுமன்றி, அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே ஆர்வமாக வாக்களித்தனர். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் உள்படபலர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதன்படி, மும்பையில் தற்போது 5-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மட்டுமன்றி திரை நட்சத்திரங்களும் வாக்களித்து வருகின்றனர்.
https://x.com/i/status/1792416981079191908
அதன்படி, தமிழ் திரைப்பட பிரபலங்கள் ஹன்சிகா மோத்வானி, ஸ்ரேயா, மற்றும் நக்மா ஆகியோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இதுதவிர ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கிரிக்கெட் வீரர் சச்சின், ஈஷா தியோல், கஜோல், வித்யா பாலன் ஆகியோரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

MUST READ