spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெண்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாப்பது வேலை அல்ல - இயக்குநர் வர்ஷா

பெண்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாப்பது வேலை அல்ல – இயக்குநர் வர்ஷா

-

- Advertisement -

கலாச்சாரத்தை பாதுகாப்பது பெண்களின் வேலை அல்ல. கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும் என Bad Girl திரைப்படத்தின் இயக்குநர் வர்ஷா கூறியுள்ளாா்.பெண்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாப்பது வேலை அல்ல - இயக்குநர் வர்ஷா வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேர்ட் கேர்ள். இந்த படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஒரு சிலா் படத்தை மிகவும் மோசமாக விமர்சித்தனர். படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று எல்லாம் பிரச்னைகள் எழுந்தது. சென்சார் தரப்பில் இருந்து பல காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதால், படக்குழு நீதிமன்றம் சென்று போராடி படத்திற்கு சென்சார் வாங்கி, படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இந்நிலையில் படக்குழு இன்று அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய படத்தின் இயக்குநர் வர்ஷா பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது அவர் பேசுகையில், 7 மாதம் முன்னாடி ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்வில் ஏறியதுதான் முதல் முறை மேடையில் ஏறியது. அதன் பிறகு நிறைய நடந்தேறிவிட்டது. 13 ஃபிலிம் ஃபெஸ்டிவல் சென்றுள்ளது. நிறைய நாடுகள் பயணித்துள்ளோம். எனது திரைப்படத்தை குப்பைபடம் என்று கூறும் போது ரோட்டர்டோம் திரைப்பட விழாவில் எனது திரைப்படம் மிகவும் பிரபல இயக்குநரின்(Costa-Gavra) திரைப்படத்திற்குப் பின்னர் திரையிடப்பட்டது. நீங்கள் ஒப்புதல் கொள்ளாததாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

we-r-hiring

மன்னையும் பொன்னையும் காப்பத்துவோம் என்று சொல்பவர்கள் தான் இந்த திரைப்படத்தை எடுத்தவர்கள், தயாரித்தவர்கள் என்னை ஆதரித்தவர்களின் குடும்ப பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தனர். இதில் இருந்தே அவர்களின் அரசியல் என்ன என்பது தெரியும். அவர்கள் மனநிலை சரியில்லாமல் உள்ளனர். பெண்கள் முடிவெடுப்பவர்களாக இருப்பதுதான் இங்கு பிரச்சினையாக உள்ளது. பெண்கள் sex object ஆக இருக்கிற வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. Sexual being ஆக இருக்கிறது தான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது.

கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறுகின்றனர். கலாச்சாரம் தான் பெண்களை காப்பாற்ற வேண்டும். பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை. கலாச்சாரத்தை பாதுகாப்பது பெண்களின் வேலை அல்ல. கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று Bad Girl திரைப்படத்தின் இயக்குநர் வர்ஷா கூறியுள்ளாா்.

தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கும் தீர்மானம்…நீதிபதி ரத்து செய்ய முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

 

MUST READ