பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக அடுத்து நொறுக்கியது. அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். நிதீஷ் திவாரி இயக்கி வரும்
இந்த படமானது இராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் ரன்பீர் கபூர், சாய்பல்லவியுடன் இணைந்து யாஷ், பாபி தியோல் போன்ற பிரபலங்களும் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ராமர், சீதையாக நடித்து வரும் ரன்பீர் கபூர், சாய்பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதன்படி இந்த படத்தை 2027-ம் ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவது தயாரிப்பாளர் மது மண்டேனா ராமாயணம் படத்திற்கான காப்புரிமை சட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அதை மீறி படத்தை எடுக்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து ராமாயணம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இந்த படமானது நிறுத்தி இதனால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -