spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுதிய ஆக்சன் திரில்லரில் சத்யராஜ்...........அதிரடியான டீசர் வெளியானது!

புதிய ஆக்சன் திரில்லரில் சத்யராஜ்………..அதிரடியான டீசர் வெளியானது!

-

- Advertisement -

தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர் சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

அந்த வகையில் தற்போது சத்யராஜ் ‘வெப்பன்‘ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் படத்தின் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். ‘உலகத்தில் உள்ள எந்த ஆயுதங்களை வைத்தும் அவனை அழிக்க முடியாது. அவள் ஒரு சூப்பர் ஹுயுமன்’ என்ற வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ