Homeசெய்திகள்சினிமாஃபெஸ்ட் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி தேர்வு

ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி தேர்வு

-

போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட  படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் படங்களின் வரிசையில், உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்ற நடிகர் சூரி இத்திரைப்படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

 

கொட்டுக்காளி திரைப்படம் அடுத்தடுத்து பல சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் தேர்வாகி வருகிறது. 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் தேர்வாகியுள்ளது. இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் நடைபெற இருக்கும் ஃபெஸ்ட் திரைப்பட விழாவிலும், கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ