சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 44. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் விரைவில் டைட்டில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் ஊட்டியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்ததாக பட குழு கேரளாவில் இடுக்கி பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருப்பதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.