- Advertisement -
இந்தியாவே கொண்டாடும் இசைஞானி இளையராஜா. இசை உலகின் வித்தகரான இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாடல்கள் பாடி இருக்கிறார். இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாக திரைத்துறையில் அறிமுகம் ஆனவர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இவரது மகள் பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் உயிரிழந்தார். அவருக்கு 47 வயது. பவதாரிணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் நடிகைகள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் பலரும் இரங்கள் தெரிவித்தனர். சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.