Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு வந்த சிக்கல்!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திற்கு வந்த சிக்கல்!

-

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு வந்த சிக்கல்!அந்த வகையில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக விஜய் சேதுபதி விடுதலை இரண்டாம் பாகம், VJS51 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் விஜய் சேதுபதி மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படத்தை குரங்கு பொம்மை படம் இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நடராஜ்
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனுராக் காஷ்யப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஜெகதீஷ் பழனிசாமி, சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அஜனிஷ் லோக்நாத் இதற்கு இசையமைத்துள்ளார்.விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு வந்த சிக்கல்! இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியீட்டு கவனம் பெற்றனர். அதே சமயம் இந்த படம் அருமையான கண்டன்ட்டில் தயாராகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவது இந்த படத்தின் ஷாட்டிலைட் உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்களும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ