- Advertisement -
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவரது பேச்சுக்கும், அவரது நகைச்சுவை வசனங்களுக்கும் பிரியங்கா பெயர் போனவர். தொகுப்பாளினியாக இருந்தாலும், அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை வெள்ளித்திரைக்கு வராவிட்டாலும், சின்னத்திரையில் மட்டுமே ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அண்மையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததுமே.

இதுவரை மகிழ்ச்சியான பிரியங்காவை மட்டுமே நாம் பார்த்திருக்கோம். அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தனது மற்றொரு பக்கம் குறித்தும் பேசினார். இதில், தனது தம்பியின் மகள் தான் தன்னுடயை மகள் என்றும், அவள் தான் என் உயிர் என்றும் தெரிவித்துள்ளார். அவளது அன்பிற்காக நான் நாள்தோறும் ஏங்குகிறேன். அதுபோன்ற காதல் மட்டும் தான் எனக்கு வேண்டும். மற்ற அனைத்தையும் நான் தருகிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். அத்தை எனும் உறவைத் தாண்டி அவள் மீது அதிக அன்பு கொண்டிருக்கிறேன் என கூறினார்.




