Homeசெய்திகள்சினிமாஉலகப் புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்

உலகப் புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்

-

- Advertisement -
இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி பாஸ்ட் அன்ட் பியூரியஸ். இப்படத்தில் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன், மைக்கேல் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்களை மையப்படுத்தி இப்படம் உருவானது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

படப்பிடிப்பின்போது, அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்பட கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்தோம். அவரை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அன்த பெண்கள் எல்லாம் சென்றுவிட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையிலிருந்து நீக்கிவிட்டார். இவ்வாறு அஸ்ட்ரோ கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ