பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளையும் நீதிமன்றத்தில் உரிமைக்கோரி பெற்றுள்ளனர்.
கொள்ளை அடித்த 6 கிலோ நகைகளை கொள்ளையர்கள் உருக்கியுள்ளனர். 2 கிலோ தங்க நகைகளை மட்டும் உருக்காமால் உடைத்து வைத்துள்ளனர். உருக்கப்பட்ட 3.5 கிலோ, உருக்கப்படாத 1 கிலோ என 4.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியான கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 2.1 கிலோ உருக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்த போலீசார் மகாலட்சு லேஅவுட் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ நகைகளையும் நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருண் மற்றும் கவுதம் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.