கோவில்பட்டியில் எஸ்.ஐ. செல்வகுமார் என்பவருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தி பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தருமாறு கேட்ட பெண் போலீஸ் இந்திரா காந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிராபிக் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக சப் இன்ஸ்பெக்டராக செல்வகுமார் என்பவா் வேலை பார்த்து வந்துள்ளாா். கயத்தாறு காவல் நிலையத்திலிருந்து பணி மாறுதல் பெற்று, டிராபிக் பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்திரா காந்தி என்பவா் பெண் போலீஸ் பணிக்கு வந்துள்ளாா். செல்வக்குமாருக்கும், இந்திராகாந்திக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது நெருக்கமாகி திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறி உள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி பிரதான சாலையில் வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து எஸ்.ஐ. செல்வகுமார் திருச்செந்தூருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தி புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

அதன் பிறகும் இருவருக்கும் இடையே மீண்டும் மொபைல் போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஏமாற்றிவிட்டதாக சண்டை போட்ட ஆடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதனால் செப்டம்பர் 5 ஆம் தேதி பெண் போலீஸ் இந்திரா காந்தியை சஸ்பென்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். டிராபிக் எஸ்.ஐ. செல்வகுமாரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இருவரும் தற்போது சஸ்பென்டில் உள்ளனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. செல்வகுமாரின் மனைவி ராஜலட்சுமி அக்டோபர் 24 ஆம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அசிங்கமாக பேசி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், பத்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து என் கணவரின் காரினை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தும், சமாதான பேச்சுவார்த்தை என கூறி என்னையும் என் உறவினர்களையும் வரவழைத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி பணத்தை தராவிட்டால் உன் கணவரின் ரகசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக வெளியிட்டு , அசிங்கப்படுத்துவேன் என பெண் போலீஸ் இந்திரா காந்தி மிரட்டல் விடுத்ததாகவும், இந்திராகாந்தியுடன் கூட்டுச்சதி மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மிரட்டல் புகார் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி பெண் போலீஸ் இந்திரா காந்தி, மதன், தர்மர், அருண் உள்ளிட்ட 5 பேர் மீது 7 பிரிவுகளில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இந்த திகில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காவல்துறையில் காலம் காலமாக பல இல்லீகள் உறவுகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தினாலும், கோவில்பட்டி பெண் போலீஸ் இந்திரா காந்தியின் கதை என்பது பஸ் டிரைவர் தொடங்கி இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர் , கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ் ஐ என பட்டியல் நீளமாக இருப்பதாலும் காக்கி சீருடை அணிந்து பல ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பதாலும், ஒரு தனி அதிகாரியை நியமித்து தீர விசாரித்து பெண் போலீசின் சீட்டிங் கதைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்று போலீசா் கூறியுள்ளனா்.
“பீகாரை விட தமிழக அரசு நன்றாக பார்த்துக்கொள்கிறது” – வட மாநிலத்தவர் பெருமிதம்


