spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குழந்தை கடத்தல் வழக்கு - சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…

குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…

-

- Advertisement -

குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.குழந்தை கடத்தல் வழக்கு - சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும் மகேஸ்வரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் மகேஸ்வரி என்பவருக்கு மணி என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தர்ஷன் என்ற நான்கு வயதில் மகன் உள்ளார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகேஸ்வரி தற்போது பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சரித்திர பதிவேடு ரவுடியான சரத் என்பவரிடம் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி அவரை பிரிந்துவிட்டார்‌. தொடர்ந்து சரத், மகேஸ்வரியை தொல்லை செய்து வந்துள்ளாா். இதன் காரணமாக  மகேஸ்வரி துபாய்க்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, தாம்பரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்று விட்டார். மகேஸ்வரியின் நான்கு வயது குழந்தை தர்ஷன் அவரது பாட்டி லட்சுமியின் வளா்ப்பில் வளா்ந்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி சரத் லட்சுமி வீட்டிற்கு வந்து நான்கு வயது சிறுவனான தர்ஷனை கடத்திச் சென்றுவிட்டார். இது குறித்து லட்சுமி எம் கே பி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எம்கேபி நகர் போலீசார் நான்கு வயது குழந்தை தர்ஷனை ரெட்டில்ஸ் அருகே மீட்டனர். ஆனால் சரத் தப்பித்து ஓடிவிட்டார்.

we-r-hiring

தொடர்ந்து போலீசார் சரத்தை தேடி வந்த நிலையில், சரத் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் நேற்று முன்தினம் மீண்டும் மகேஸ்வரியின் தாயார் லட்சுமி வீட்டிற்கு வந்து உனது மகளை மீண்டும் அனுப்பிவை எனக்கூறி, கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி இதுகுறித்து மீண்டும் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எம்.கே.பி நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த சரத்(24). தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்கின்ற மணலி ராஜ்(30). கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த விக்கி என்கின்ற மாவு விக்கி(21). வியாசர்பாடி பி.வி காலணி பகுதியை சேர்ந்த மற்றொரு ராம்குமார்(22) என 4 பேரை கைது செய்தனர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, எம். கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

‘முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல’ – திருமாவளவன்..!!

MUST READ