spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

-

- Advertisement -

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?

we-r-hiring

ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார். மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்.

இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகியுள்ளன.

குறைந்த விலையில் நகை ; டாக்ஸி ட்ரைவரிடம் 12 லட்சம் மோசடி; வசமாக சிக்கிய பெண்

MUST READ