spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை

பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை

-

- Advertisement -

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் செல்லனூரில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

k

we-r-hiring

இந்த வீட்டில் சுப்பிரமணி, தங்கமணி தம்பதியினர் இருவர் மட்டும் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் கணவர் சுப்பிரமணியை கட்டாயப்படுத்தி பேரனை அழைத்து வர கூறியுள்ளார். இதனால் கணேசபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சுப்பிரமணி சென்று விட்டார். மதியம் 2 மணிக்கு திரும்பி​ வந்து பார்த்தபோது, தங்கமணி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து வந்து பார்த்தபோது தங்கமணி இறந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் கழுத்தில் இருந்த நகைகள் அப்படியே இருந்தன. பீரோவில் இருந்த பணமும் அப்படியே இருந்தது. மேலும் இருதட்டங்களில் உணவு சாப்பிட வைத்த நிலையில் இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் கோவை ரூரல் போலீஸ் எஸ் பி பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்தியா ஆகியோர், தங்கமணியின் குடும்பத்தாரிடம் உறவினரிடமும் விசாரணை நடத்தினர். கோவையில் இருந்து தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை ஆய்வு செய்தார். மோப்பநாய் வைத்து ஆய்வு செய்யப்பட்டது. கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, கொலையில் ஈடுபட்டவர் தன்னை கண்டுபிடிக்க கூடாது என கருதி உடலைச் சுற்றிலும் மசால் பொடியை தூவி சென்றுள்ளார் மேலும் தலையணையை கொண்டு தங்கமணியை கொலை செய்யவும் முயன்றுள்ளார். இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அருகில் ஒரு காரியத்திற்காக ஊர் பொதுமக்கள் அனைவரும் சென்ற நிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து உறவினர்கள், அருகில் வசிப்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் வரவு, செலவு பிரச்சனையால் ஏற்பட்ட கொலையா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

MUST READ