spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்

மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்

-

- Advertisement -

மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி(38), பூந்தமல்லியில் தங்கி வெல்டராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தனது நண்பருடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

murder

அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு சிறிது மது தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்தோணி தாங்களே உடல் வலிக்காக குடித்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் கேட்டதையடுத்து சிறிது மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மதுவை குடித்த அந்த நபர் மீண்டும் தனக்கு ஒரு கட்டிங் வேண்டும் என கேட்டதையடுத்து அந்தோணி தர முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியை சரமாரியாக வெட்டினார்.

we-r-hiring

இதை கண்டதும் அந்தோணியும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்த நிலையில், அவரை விடாமல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியதில் அந்தோணிக்கு வாய், காது, வயிறு ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அங்கு மது அருந்தி கொண்டிருந்த மற்ற குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த நாலாபுரம் சிதறி ஓடினார்கள். பின்னர் வெட்டுக்காயம் அடைந்த அந்தோணியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாங்காடு மற்றும் நசரத்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புளியந்தோப்பில் தினந்தோறும் ஏராளமானோர் அமர்ந்து அது அருந்துவதாகவும் இங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இரண்டு தரப்பு போலீசாரும் இங்கு ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, எனவே இந்த பகுதியில் போலீசார் ரோந்து பனியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ