spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காதல் ஜோடி தற்கொலை! ஓரே வாரத்தில் விபரீத முடிவு!

காதல் ஜோடி தற்கொலை! ஓரே வாரத்தில் விபரீத முடிவு!

-

- Advertisement -

சென்னையில் கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த நிலையில் ஓரே வாரத்தில் விபரீத முடிவு.காதல் ஜோடி தற்கொலை! ஓரே வாரத்தில் விபரீத முடிவு!விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை  சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் ஆகாஷ் (19) விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே போல் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகள் அபிநயா (19) என்பவரும் அதே கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆகாஷூம்- அபிநயாவும் ஒருவரை காதலித்து வந்துள்ளனா். கடந்த வாரம் இருவரும் சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தகவல் அறிந்து ஐசிஎஃப் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கி நிலையிலும், அபிநயா கண் மற்றும் வாயில் ரத்த காயங்களுடன் வாயில் நுரை தள்ளியவாறு தரையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக ஆகாஷ் – அபிநயா இருவரும் காதலித்து வந்ததும் கடந்த வாரம் காதலர்கள் இருவரும் தங்களது பெற்றோரிடம் கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையில் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு இங்கு வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் கணவன் மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து தங்கியது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஆகாஷ் அண்ணன் ஹரிதாஸ் சென்னையில் தங்கி வேலை செய்து வருவதும் அவர் இருவரையும் சென்னைக்கு வரவழைத்து வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் நேற்று காலை காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஆகாஷ் அபிநயாவை அடித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் இரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்த ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி  இருந்ததை பார்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸார் இரு வீட்டார் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் பெற்றோரிடம் விசாரித்த பின்னரே முழுமையாக தகவல் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

MUST READ