சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் மம்மி பாஸ்ட்புட் உணவகத்தை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரம் கிரேஸ் கார்டன் நான்காவது தெருவை சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆனந்த் முருகன் (எ) குள்ளா ஆனந்த் பாஸ்ட்புட் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் ஓசியில் இரண்டு சாப்பாடு கேட்டு மிரட்டி உணவு வாங்கிச் சென்றுள்ளார்.
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது (apcnewstamil.com)
இதனை அடுத்து அவர் பெயரை சொல்லி மூன்று பேர் கடைக்கு சென்று இரண்டு ப்ரைட் ரைஸ் வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் என்கின்ற பூச்சி மோகன், பழைய வண்ணாரப்பேட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்கின்ற பூச்சி வினோத், ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் முருகன் குள்ள ஆனந்த், திருநெல்வேலி மாவட்டம் ஒத்தக்கடை தெரு பசும்பொன் நகரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.