கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.
தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட இந்தியாவில் இருந்து சைபர் மோசடி கும்பலுக்கு உதவும் 4 பேரை தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு கைது செய்துள்ளனர். இதுவரை இந்த ஆண்டில் மட்டுமே இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகார் போர்டல் மூலம் 350 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம், பெங்களூரு காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியை போல தன்னை அடையாளம் காட்டிகொண்டு ஆள்மாறாட்டம் செய்து, மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலை மோசடி தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்று பொய்யாகக் கூறி தன்னை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியதாகவும், சிக்கிக் கொள்ளாமல் இருக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கிடைக்கப்பெற்ற பணம் இல்லை என்பதை அறிய , வங்கியில் உள்ள பணத்தை மாற்றும்படி வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார் .
கைது செய்யப்படுவதற்கு பயந்து போன பாதிக்கப்பட்டவர் மோசடி என்பதை உணராமல் உண்மையிலேயே வடக்கில் சிக்கிக் கொண்டதாக நினைத்து 81, லட்சத்து 58,000 ரூபாய் பரிமாற்றம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் பிரிவு தலைமையகம் வழக்கு பதிவு செய்தது. விசாரணையின் போது அனைத்து வங்கி கணக்குகளில் விவரங்கள் பெற்று விசாரணை செய்யப்பட்டது. பரிவர்த்தனையில் பயன்படுத்தப்பட்ட முதல்-நிலை வங்கிக் கணக்குகளில் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கே ஷோபனா என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது.
கோகுலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தனது சகோதரர் சுரேஷ் தனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க கூறியதாகவும், ஆன்லைன் கேமிங் தொழிலுக்கு கணக்கைப் பயன் படுத்தினால் கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் . இதை அடுத்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கால்நடைத் தீவன வியாபாரியான அவரது நண்பர் செந்தில் அவருக்கு வழிகாட்டினார் என்பதும் தெரியவந்தது. வங்கி கணக்குகளை துவக்கி விவரங்களை கொடுத்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரித்ததில் ஷோபனாவின் கணவர் கார்த்திக் சுரேஷ் அறிமுகப்படுத்திய நபரான பியூஷ் என்ற நபரைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் கேமிங் தொழிலில் ஈடுபட்டால் பியூஷ் வருமானத்தில் 2% லாபம் தருவதாக தெரிவித்ததாகவும் ,அதை நம்பியே வங்கி கணக்குகள் அடுத்தடுத்து தூக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திக்கிடம் வங்கிக் கணக்கைத் திறந்து, நெட் பேங்கிங்கை அமைத்து, மின்னஞ்சல் ஐடி, மொபைல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை பியூஸ் என்பவர் ஒப்படைக்கச் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையில் பியூஷ், கார்த்திக்கை லக்னோவில் சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டதாகவும்,கார்த்திக் மாற்றுத்திறனாளி என்பதால், அவர் தனது மனைவியின் மூத்த சகோதரர் பிரபுவிடம் அந்தப் பணியை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி வடக்கு மாநிலிங்களுக்குச் செல்லும் லாரி ஓட்டுநராக இருப்பதால். பிரபு லக்னோவுக்குச் சென்று வங்கிப் விவரங்களை பியூஷிடம் ஒப்படைத்ததாக கார்த்திக் தனது விசாரணையில் தெரிவித்துள்ளார்
வங்கி கணக்குகளை ஒப்படைத்த பிறகு ஜனவரி 2 மற்றும் 3, அன்று, ஷோபனாவின் வங்கிக் கணக்கிற்கு ₹12 லட்சம் பணம் மாற்றப்பட்டது. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை எடுத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவுவது தெரியாமல் ஆன்லைன் கேமிங் உதவுவதாக வங்கிக் கணக்கு துவங்கி கொடுத்த கணவன், மனைவி ,சகோதரர் உட்பட நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு மடிக்கணினி மற்றும் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஷோபனா குமார் மற்றும் கார்த்திக் ராஜா சுரேஷ், செந்தில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த சைபர் கும்பலை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.