காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி நாளை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தனுஷின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் வழக்கில் தொடர்புடைய, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏ டி ஜி பி ஜெயராமன் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆஜரன பூவை ஜெகன் மூர்த்திக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதேபோல் ஏ டி ஜி பி ஜெயராமை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் தொடர் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.
தொடர்ந்து ஏ டி ஜி பி ஜெயராம் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சி பி சி ஐ டிக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் சஸ்பெண்ட் உத்தரவில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணை வந்த நிலையில் காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி நாளை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்ததுள்ளாா்.