Homeசெய்திகள்க்ரைம்மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்

-

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்

வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

murder

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பரமசிவம் என்பவரது மகன் நரேஷ், ஆசிரியராக பணி புரிவதாக பொய் சொல்லி விழுப்புரம் மாவட்டம் பெரியவலசை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் வசந்தா தம்பதியினரின் இரண்டாவது மகள் ஜெயபாரதியை கடந்த 2017 ஆம் ஆண்டு 16 சவரன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நரேஷ் எந்த வேலைக்கும் போகாமல் குடிபோதையில் வரதட்சணை கேட்டு அடிக்கடி ஜெயபாரதியை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், நேற்று நரேஷ் அவரது அம்மா, அக்கா ஆகியோருடன் இணைந்து ஜெயபாரதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி மாட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

student suicide

இந்நிலையில் ஜெயபாரதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நரேஷ் ஜெயபாரதியின் தம்பி தட்சிணாமூர்த்திக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து தட்சிணாமூர்த்தி அவரது அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் ஓலைப்பாடி கிராமத்திற்கு வந்து பார்த்தபோது தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஜெயபாரதியின் தந்தை, தாய் ,தம்பி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு சென்று ஜெயபாரதியின் உடலை பார்த்தபோது ஜெயபாரதியின் முகம், தாடை, வாய் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டும் தாடை வீக்கமாக இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.  இதையடுத்து வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நரேஷ், அவரது அக்கா, அம்மா ஆகிய மூவரும் இதுவரை வந்து ஜெயபாரதியின் உடலை பார்க்காமல், கிராமத்திலும் இல்லாமல், தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளனர்.

இந்நிலையில் ஜெயபாரதியின் தந்தை, தாய் மற்றும் அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர், கொலை வழக்காக பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் காவல்துறையினரை கண்டித்தும் நரேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரியும், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயபாரதியின் கணவர் நரேஷை கைது செய்தனர்.

MUST READ