Homeசெய்திகள்க்ரைம்கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - அதிமுக சஜீவனுக்கு சம்மன் 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன் 

-

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - அதிமுக சஜீவனுக்கு சம்மன் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்டு விட்டு கேரளாவிற்கு கூடலூர் வழியாக சென்ற சயானின் கூட்டாளிகளின் வாகனங்களை கூடலூர் போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அதிமுக மாநில வர்த்தக அணி தலைவராக உள்ள சஜீவன் அவர்களை விடுவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிபடை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில் தற்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலிசாரும் சஜீனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.

சஜீவன் தனக்கு சொந்தமாக கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் உள்ள 40 ஏக்கர் நிலத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தொடர்ந்து மான் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாட கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் கடந்த ஏப்ரல் மாதம் துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து வருகிறார் என தெரியவந்துள்ளது .

இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக வரும் 5-ந்தேதி கோவையில் உள்ள சி பி சி ஐ டி விசாரணை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கோவையில் உள்ள அவரது மனைவியிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ