குளித்தலை டாஸ்மாக் சேல்ஸ் மேனனுக்கு நேர்ந்த விபரீதம்
குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் வேலை பார்த்த சேல்ஸ் மேனை பட்டா கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் அரசு மதுபான கடையில் பார் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் பாரில் புதுக்கோட்டை மாவட்டம் சிக்கப்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அப்பாரில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தெற்கு மணத்தட்டையை சேர்ந்த அண்ணன் தம்பி பிரதீப், சேது ஆகிய இருவரும் பாரில் மது அருந்த சென்றுள்ளனர். மது அருந்திய இருவரும் சேல்ஸ்மேன் ஸ்ரீதரிடம் தகறாரில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பிரதீப், சேது ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று பட்டா கத்தியை எடுத்து கொண்டு மீண்டும் பாருக்கு வந்து ஸ்ரீதரை வெட்டியுள்ளனர். ஸ்ரீதர் உயிருக்கும் பயந்து ஓடிய நிலையிலும் பாரினை அடித்து நொறுக்கி அவரை விடாமல் துரத்திய அவர்கள் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளனர்.
அப்போது சுங்ககேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்றபோது குற்றவாளிகளை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாக்கத்தி அவரது கையினையும் கிழித்ததில் விரல்களில் காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மற்ற போலீசாரும் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு போராடிய ஸ்ரீதரை மீட்ட போலீசார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அண்ணன் தம்பி இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சங்ககேட் பாரில் தகராறு ஈடுபட்டு பாரினை அடித்து நொறுக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதீப் முன்னாள் குளித்தலை நகர பாஜக துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிட்டதக்கது. தற்போது பாஜக கட்சியில் இல்லை. மேலும் இது குறித்து குளித்தலை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.