spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –  

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –  

-

- Advertisement -

திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!!

we-r-hiring

ஈரோடு நகரில்  பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து  78 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். திருப்பூரில் கூலி வேலை செய்வதாக தங்கி அண்டை மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!!

ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் கடந்த 6 மாதங்களாக பூட்டிய வீடுகளை உடைத்து மர்ம கும்பல் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக ஈரோடு வடக்கு, தாலுகா, மொடக்குறிச்சி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றவாளிகளை கண்டறிய ஈரோடு DSP ஆறுமுகம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பழங்குற்றவாளிகளின் பட்டியலுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!!

இந்த விசாரணையில் பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேட்டுக்கடை அருகே நசியனூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிந்த போது அவ்வழியாக வந்த 4 பேரை மடக்கி விசாரித்ததில் அவர்களுக்கு இந்த தொடர் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!!

பிடிபட்ட கணேசன், தௌபிக் ரஹ்மான், ஆண்டனி ராபின்சன் (எ) நிசாந்தன் மற்றும் தையார் சுல்தான்(எ)தயாஸ் ஆகிய நால்வரையும்  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். தேனி ஓடைப்பட்டியை சேர்ந்த கணேசன், ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த தௌபிக் ரஹ்மான், மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த ஆண்டனி ராபின்சன் மற்றும் தையார் சுல்தான் நால்வரும் திருப்பூரில் கூலி வேலை செய்வதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொண்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!!

ஈரோடு நகரில் மட்டும் 7 வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 78 சவரன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் வீடுகளில் பூட்டை உடைக்க, எளிதாக மறைத்து எடுத்து செல்லும் வகையில் அவர்களே தயாரித்த கழற்றி மாட்டும்  இரும்பு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் கையுறை ஆகியவற்றை பறிமுதல்  செய்தனர். இதில், முக்கிய குற்றவாளியான கணேசன் மீது தமிழகத்தில் 74 குற்ற வழக்குகள் உள்ளன.  அவற்றில் 15 வழக்குகளுக்கு பிடி வாரண்ட் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ