spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்...!

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!

-

- Advertisement -

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்...!சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42) என்பவர் அவருக்கு சொந்தமான மினி லாரிகள் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை படையலிட்டு நிறுத்தி வைத்திருந்தார்.

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்...!அப்போது இவரது நிறுவனத்தில் பணி புரிந்து வந்த உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் பகுதியை சேர்ந்த ஜெனிக்கூ பிரகாஷ் மகன் சத்திய பிரகாஷ் (20) என்பவர் ஒரு மினி லாரியை கடத்திக் கொண்டு சென்றதாக தனுஷ்குமார் சென்னை புழல் பகுதி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

கர்நாடகாவில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது

we-r-hiring

இதன் அடிப்படையில் போலீசார் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடக்கும் போது அந்த மினி லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் மினி லாரியை கடத்தி வந்த சத்தியப் பிரகாஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ