Homeசெய்திகள்க்ரைம்பாஜக பிரமுகர் கொலை - குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

பாஜக பிரமுகர் கொலை – குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

-

பாஜக பிரமுகர் செல்வகுமார் கொலை வழக்கில்  முக்கிய குற்றவாளி குட்டை வசந்த் காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது சுட்டு பிடித்த போலீசார்

பாஜக பிரமுகர் கொலை - குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

கடந்த 27ஆம் தேதியன்று சிவகங்கை அருகே உள்ள வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் என்பவர் இரவு 9 மணி அளவில் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சிவகங்கை நோக்கி வந்த பொழுது நடுரோட்டில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் செல்வக்குமார்  பலத்த காயம் காயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

செல்வக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கைது செய்தால் மட்டுமே செல்வகுமார் உடலை பெற்றுக் கொள்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தலைமையில் ஏராளமானோர் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

 

 பாஜக பிரமுகர் கொலை - குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்காவல் துறை குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் ஐந்து பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வைரம்பட்டியைச் சேர்ந்த குட்டை வசந்த் என்ற வசந்தகுமார் என்பவர் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார் இவரை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டி கண்மாய் கரையில் உள்ள கோவில் அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குட்டை வசந்தை புதுப்பட்டி கிராமத்திற்கு காவல்துறை அழைத்துச் சென்று ஆயுதங்களை  கைப்பற்ற போலீசார் முற்பட்டபோது அவர் திடீரென அங்கே பதிக்க வைத்திருந்த அறிவாளால் காவல் சார்பு ஆய்வாளர் பிரதாப் என்பவரை  இடது கையில் வெட்டி தப்பிக்க முயன்றார் அப்போது சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் மணிகண்டன் குட்டை வசந்தின் காலில் சுட்டு அவரை பிடித்துள்ளார்.

தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குற்றவாளி வசந்தகுமார் என்ற குட்டை வசந்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே  பிரவீன் உமேஷ்  மருத்துவமனைக்கு நேரில் வந்து காயமடைந்த காவல் சார்பு ஆய்வாளரை நலம் விசாரித்தார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ