ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என போலீசார் விசாரித்து வந்த நிலையில், இவர்களது வீட்டில் பணிபுரிந்து வந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ் குமார் அவரது மனைவி பூவலட்சுமி ஆகிய இருவரை தேடி வந்த நிலையில் இருவரையும் ஆவடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் இதில் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
முதியவர் விபத்து குறித்த சிசிடிவி காட்சி சிக்கியது…சிறுவனின் தாய் கைது!