spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

-

- Advertisement -

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தங்கவேல் என்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைதுசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் உள்ள சுண்டக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ஐந்து மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.  மாணவிகளின் புகாரை  தொடர்ந்து தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார்.

அதில் அந்த ஆசிரியர் 9 மற்றும் 10 வயதுடைய  மாணவிகளின் கன்னம் , இடுப்பில் கிள்ளுவது போன்ற பாலியல் சீண்டல்களில்  ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த அந்தப் பள்ளியின் இடைநிலை ஆசிரியரான திருநெல்வேலி வடுகன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (43) என்பவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

we-r-hiring

பின்னர் நேற்று இரவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்தனர்.  இதனையடுத்து அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்… டிஜிபி உத்தரவு!

MUST READ