உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருபவர் ராஜி (44) . இவர் கடையில் இருந்த போது அங்கு வந்த ஒரு பெண் அவரிடம் இருந்த மூன்றரை பவுன் நகையை வைத்து பணம் பெற முயற்சி செய்துள்ளார். அவர் மீது சந்தேகம் பட்ட நகைக்கடை உரிமையாளர் நகையை பரிசோதனை செய்ததில் அது போலியான நகை என தெரியவந்தது. இதனை அடுத்து எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் ராஜி கொடுத்த புகார் பேரில் போலி நகைகளை வைத்து பணப்பெற முயற்சி செய்த பெண்ணை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் சேலம் மாவட்டம் நாலிக்கபட்டியை சேர்ந்த குமார் மனைவி ஞானாம்பாள் (40) என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வேறு ஏதாவது கடைகளில் இது போல் போலி நகைகளை வைத்து பணம் பெற்றுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயற்சி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்