Homeசெய்திகள்க்ரைம்அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

-

- Advertisement -

மணப்பாறையில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசில் ஒப்படைத்தனா்.அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவாிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவா்கள்திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்காயி என்ற பெரியம்மாள் (வயது 65). இவர் இன்று மணப்பாறை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் வந்தபோது பேருந்தில் டிப்டாப்பாக வந்த இருபெண்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர்.

கடைவீதி பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்தபோது செயின் பறிக்கப்பட்டதைக் கண்ட மூதாட்டி மற்றும் பேருந்தில் பயணம் செய்த மற்ற பெண்கள் சத்தமிட்டதால், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்ற இரு பெண்களையும் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தாா்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்

 

MUST READ